15 ஆவது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தான் இன்று மூன்றாவது கட்டமாக சென்னை டி எம் எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது, ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத கால அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் அப்படி அறிவித்தால் மட்டுமே வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெறுவோம் என திட்டவட்டமாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்னும் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால் இதில் அரசு தரப்பில் நிதி நிலைமை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட முடியாத என தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்து துறை இணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் டி.எம்.எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இதனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர் ஆனால் தமிழக அரசு தரப்பில் இன்று இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தார்ப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டவில்லை. இந்த நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.
ஆனால் தொழிற்சங்கங்கள் சார்பில் தங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.