கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா நடைபெற்றது.
புதுமை கண்டுபிடிப்புவடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.முதல்வர் முனைவர் அலமேலு தலைமை தாங்கிய இந்த விழாவை கல்லூரியின் துணை முதல்வர் கருப்புசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் பேராசிரியர்.டி.ஜி. சீத்தாராம் அவர்களால், ஏஐசிடிஇ தலைமையகம், புது தில்லியில் இருந்து மெய்நிகர் முறையில் துவக்கி வைக்கப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் "புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் பூட்கேம்ப்களை இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் பத்து மையங்களில் தொடங்குகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம் இன்று தொடங்கி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக வோல்வோ குழுமத்தின் புதுமை கண்டுபிடிப்புகளின் ஆலோசகர் அர்ஜுன் மற்றும் கௌரவ விருந்தினராக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்பு துறை நிர்வாக ஆசிரியர், விகாஸ்வர்மா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
தொழில்முனைவோர் கல்விக்கான ஆதரவிற்காக புகழ்பெற்ற வாத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற சில பேச்சாளர்கள் மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் பயிற்சி அமர்வுகளை வழங்க உள்ளனர்.இந்த முகாமை புத்தாக்க மையத்தைச் சேர்ந்த ரதி,நரேந்திரன்,சாந்தினி மற்றும் டாக்டர் ரவீன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.