தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு - பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை மற்றும் அதிகனமழையினால் அறிவிக்கப்பட்ட விடுமுறை ஆகியவை முடிந்து நாளை (02.01.2024) பள்ளிகள் திறக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து அதிகனமழையினால் பள்ளிகளின் தற்போதை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (01.01.204) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள், குடிநீர் வசதி, சத்துணவுக்கூடம், கழிப்பறை வசதி, கைகழுவும் இடம் மற்றும் பள்ளி வளாகம் முழுவதையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சி.வ. பள்ளியில் சூழ்ந்துள்ள மழைநீரை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினர் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு துரிதமாக இப்பணிகளை முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்தார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா ஏரல் வட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், குடிநீர் வசதி, சத்துணவுக்கூடம், கழிப்பறை வசதி, கைகழுவும் இடம் மற்றும் பள்ளி வளாகம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில்குமார், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.