ஈரோடுபோக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்

 

ஈரோட்டில் போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது,அதிமுக ஆட்சியில் 73 கோரிக்கைகளில் 52 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, ஊதிய பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை மற்றும் உதிரி பாகங்கள் வழங்கப்படவில்லை எனவும் பல பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளன மேலும் பல வழிகளில் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.ஊழியர்களுக்கு டி, ஏ, வழங்கப்படவில்லை எனவும்,போக்குவரத்து கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.ஜனவரியில்தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தைக்கு


 சங்கங்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் எனவும் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே. வி. ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, ஈரோடு மாநகர் பெரியார் நகர் பகுதியில் செயலாளர் இரா.மனோகரன், ஈரோடு மண்டல செயலாளர் ஜீவா டி.ராமசாமி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர் தேவராஜன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்ஜான்,உட்பட சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post