கோவை சூலூர் தாலுகா நீதிமன்ற வளாகத்தில் வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடப்பதையொட்டி அதற்கு உண்டான அழைப்பிதழை தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பார்வையாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் , வழக்கறிஞர் கவிதா விஹெச்பி தமிழ்நாடு ஆகியோர் சூலூர் வழக்கறிஞர்களான திமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் யுவராஜ் சூலூர் அரசு வழக்கறிஞர் மகேந்திரன் அதிமுக வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பிரபு ராம் அதிமுக நகரச் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகைவேலன் மற்றும் மகளிர் வழக்கறிஞர்களான கவிதா தமிழ்ச்செல்வி அமுதா திவ்யா கீதா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையைச் சேர்ந்துவர்களுக்கும் வழங்கப்பட்டது அனைவரும் கும்பாபிஷேக தினத்தன்று மாலையில் தங்களது வீடுகளில் கோலம் இட்டு ஐந்து கார்த்திகை தீபங்கள் ஏற்றி வைத்து ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை ஒன்பது முறை உச்சரிப்பதாக உறுதி அளித்துள்ளனர். பெற்றுக்கொண்ட அனைவருக்கும் விஸ்வ ஹிந்து பரிசத் சார்பாக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டோம்.