இளையராஜா இசையமைப்பில் வெளியான வட்டார வழக்கு திரைப்படத்தை கோவை பிராட்வேஸ் சினிமாஸில் கண்டு ரசித்த வட்டார வழக்கு நடிகர் நடிகை உள்ளிட்ட திரைப்பட குழுவினர்

இளையராஜா இசையமைப்பில் வெளியான  வட்டார வழக்கு திரைப்படத்தை,கோவை பிராட்வேஸ் சினிமாஸில் கண்டு ரசித்த வட்டார வழக்கு நடிகர் நடிகை உள்ளிட்ட திரைப்பட குழுவினர்..ரசிகர்கள் ஆரவாரம்…
டூ லெட்’ சந்தோஷ், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வட்டார வழக்கு’. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ள  இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்… இந்நிலையில் கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் ரசிகர்களை சந்தித்த வட்டார வழக்கு திரைப்பட குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர்.இதில் படத்தின் இயக்குநர்  கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசுகையில்,
இது 1985-ல் நடப்பது போன்ற கதை களத்தை கொண்ட இதில், ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.  மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாக கிராமத்து பின்னனியில் இருப்பதால்,இசைஞானியை அணுகியதாக குறிப்பிட்ட அவர்,இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்றார். அவரது இசை, இந்தப் படத்துக்குப் பெரியபலம் என்று கூறிய அவர்,என்னிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத போதும். அவர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவரே விரும்பி இந்த படத்திற்கு இசையமைத்தார் என நெகழ்ச்சி பட தெரிவித்தார்..தொடர்ந்து பேசிய நாயகி ரவீனா ரவி பின்னனி குரல்கள் நிறையலபேசி இருந்தாலும் இந்த படத்தில் கிராமத்து பேச்சு வழக்கை  தாம் கொஞ்சம் சிரமபட்டே பேசியதாக தெரிவித்தார்..,சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில்  நடிகைகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான் என்றாலும்,இது போன்ற கிராமத்து பின்னனி படங்களுக்கு அதுவே பெரிய அனுபவமாக இருப்பதாக தெரிவித்தார்…
Previous Post Next Post