கோவை ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…கலைச்சாரல் சங்கமம் என நடைபெற்ற விழாவில் மாணவ,மாணவிகள் உற்சாகம்…
கோவை அருகே உள்ள பிச்சனூரில் ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்..இந்நிலையில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாணவ மாணவியர் "கலைச்சாரல் சங்கமம்" என்னும் பெயரில் பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர்.நிகழ்ச்சியில் தமிழ் பாரம்பரிய உடை அணிந்த மாணவ,மாணவியர் அணிந்த பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.. தொடர்ந்து கிராமிய நடனத்துடன் குதிரை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் பறையாட்டம் ,சிலம்பாட்டம், கோலப்போட்டி கயிறு இழுத்தல், உறியடித்தல், கிராமியச் சந்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழர் மரபைப் போற்றும் வகையில் நடைபெற்றன. இவ்விழாவின் போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். எஸ் .மனோகரன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.. இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் என பலர் கலந்து கொண்டனர்…