சகோதரத்துவத்தவம்,நல்லிணக்கம் போன்ற சமுதாய ஒற்றுமையை பேணி காப்பது தற்போது அவசியமாக இருப்பதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் கோவையில் தெரிவித்துள்ளார்…
கோவையில் நமக்கு நாமே ஐம்பெரும் விழா போத்தனூர் சாலையில் நடைபெற்றது..இதில்,போதை பொருட்களுக்கு எதிராக கையெழுத்து பிரச்சாரம்,அகில இந்திய பாரதியார் தமிழ் சங்கம்,திருவள்ளுவர் மன்றம் துவக்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளாக நடைபெற்றன.. ,முன்னதாக திருவள்ளுவர், பாரதியார்,மற்றும் அண்மையில் மறைந்த விஜயகாந்த் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.இதில் குருஜி சிவாத்மா,பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பேசிய முகம்மது ரபீக்,இந்திய நாட்டில் உள்ள அனைவருக்கும் சகோதரத்துவம்,சமத்தும் போன்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர்,நல்லிணக்கம்,ஒற்றுமை அனைவரும் ஒரு தாய் மக்கள் என கூறிய மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகளை இன்றைய சமுதாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.சகோதரத்துவம்,மத நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சியடையும் என குறிப்பிட்ட அவர்,அம்பேத்கர்,மகாத்மா காந்தி,நவீன சிற்பி என போற்றப்படும் நேரு ஆகியோர் இல்லாமல் வரலாறு இல்லை என கூறிய அவர்,ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவர்களை தவிர்த்து இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது என்றார்.மேலும் சகோதரத்துவத்தவம்,நல்லிணக்கம் போன்ற சமுதாய ஒற்றுமையை பேணி காப்பது தற்போது அவசியமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்..