தூத்துக்குடி - தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு இரயில்கள் : தெற்கு இரயில்வே அறிவிப்பு.!


 தூத்துக்குடி - தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு இரயில்கள் : தெற்கு இரயில்வே அறிவிப்பு.!

பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடி - தாம்பரம் இடையே 2 சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஜன.14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து வண்டி எண் 06001 காலை 7.30 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படும். மேலும், ஜன.15 மற்றும் 17ம் தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து வண்டி எண் 06002 காலை 6.00 மணிக்கு தாம்பரத்திற்கும் புறப்படும். 

மேற்கண்ட முன்பதிவில்லாத இரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம்,  தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர், தூத்துக்குடி வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Previous Post Next Post