கண்மாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவி உட்பட 2 பேர் சாவு: மேலும் ஒரு கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை.!


 கண்மாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவி உட்பட 2 பேர் சாவு: மேலும் ஒரு கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை.!

தூத்துக்குடி அருகே கண்மாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவி உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிய கல்லூரி மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்த பலத்த மழை காரணமாக குளம் நிரம்பி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த  ஏராளமானோர் அதில் குளித்து வருகின்றனர்.  

இந்நிலையில் நேற்று  மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த நன்பர்களான ஒன்பதாம் வகுப்பு மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். இதில் மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை பார்த்த கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி ஆகியோர் அவரை மீட்க போராடியுள்ளனர். இதில் மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி ஆகியோர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கனிச்செல்வி என்பவரை அருகே இருந்த கிராம மக்கள் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இன்று புத்தாண்டு கொண்டாடும் நிலையில் நேற்று நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post