கோவை மாநகராட்சி 80வது வார்டு கெம்பட்டி காலனி நியாயவிலை கடையில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்ப்பட்ட கெம்பட்டி காலனி, தர்மராஜா கோவில் வீதி , நாடார் வீதி பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பும் ரூ.1000 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில்
பகுதி துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும் என்று கூறினார்.
Previous Post Next Post