ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி8 வயது சிறுவன் கொடுர கொலை - இளஞ்சிறார் கைது.!தூத்துக்குடியில் அதிர்ச்சி!


 ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி8 வயது சிறுவன் கொடுர கொலை - இளஞ்சிறார் கைது.!தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்  அருகேயுள்ள வேம்பார், சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகளும் அஸ்வின்குமார் என்ற 8 வயது மகனும் உள்ளனர்.  அஸ்வின்குமார் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். முத்துக்குமாரின் வீடு வேம்பார் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் அருகில் உள்ளது. சம்பவ நாள் அன்று அஸ்வின்குமாருக்கு காய்ச்சல் என்பதால் பள்ளிக்கு செல்லவில்லை.

தாய் சாந்தி தன் மகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். அஸ்வின்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  இந்த நிலையில், அஸ்வின்குமார் கடலோட பாதுகாப்பு காவல் நிலையம் முன்பு தலைகுப்புற வெகுநேரமாக கிடந்திருக்கிறார். இதைப்பார்த்த அவ்வழியே சென்றவர்ள், அஸ்வின்குமாரை தூக்கிப் பார்த்தனர். அப்போது, கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. 

இது குறித்து தகவல் அறிந்து, சூரங்குடி காவல் நிலைய போலீஸார், விரைந்து வந்து  ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்தில் கத்திக்குத்து இருந்ததால் சிறுவனை யாராவது கொலை செய்து சடலைத்தை போட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

இதுகுறித்து   சூரங்குடி காவல் ஆய்வாளா் (பொ) வெங்கடேஷ் பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது.  ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி அந்த சிறுவனை அவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post