ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே, வீடு தீப்பற்றி எரிந்ததில், 6 ஆடுகள் பலி- 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்..


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த கொமாரபாளையம் ஊராட்சி, பகுதி, அம்பேத்கர் நகரில், தகர செட் அமைத்து குடியிருந்து வருபவர் ஆறு முகம்.இவரதுமனைவிதுளசியம்மாள் இவர்கள் இருவரும் ஆடு மாடுகளை வளர்த்தும், விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று காலை ஆறு முகம் விவசாய பணிக்கு சென்று விட் டார்.வீட்டில் இருந்த, துளசியம்மாள் வீட்டின் அருகே பசு மாடுகளுக்கு தீவ னம் வைத்து கொண்டு இருந்த போது, மதியம் 12.30 மணியளவில், வீட்டிற் குள் திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஆறுமுகம் வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த,அக்கம்பக்கத்தினர் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தும், தீயணைப்பு துறையினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும்முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் வீடுமுற்றிலும்எரிந்து, தரை மட்ட மானது. வீட்டில் இருந்த 20 ஆயி ரம் ரூபாய் ரொக்க பணம் உட்பட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. ஆட்டு பட்டியில் கட்டி வைக்கப்  பட்டி ருந்த 2 குட்டி ஆடுகள் உட்பட 6 ஆடு கள் தீயில் கருகி, உயிரிழந்தது, மேலு ம் பசு மாடு ஒன்று தீயில்,காயம் அடை ந்து,பாதிப்புக்கு உள்ளானது..

இச்சம்பவம் குறித்து அறிந்த,கொமார பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து, சம்பந்தப்பட்ட குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறியும்,தனது சொந்த நிதியில், 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கினர்.அவரு டன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் உடன் சென்றனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தீவிபத்து குறித்து, கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர் மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தருக்கும் தகவல் அளித்ததன் பேரில், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், கால்நடை மருத்துவர் செல்வராஜ், எரிவாயு உருளை விநியோகிப்பவர் சம்பவ இடம் விரைந்து, தீவிபத்தால் முற்றிலும் எரிந்து நாசமான குடிசை யை, பார்வை யிட்டும். விபத்து குறி த்து, சம்பவம் நடந்த வீட்டின் உரிமை யாளரிடம் விபரங்களை கேட்டறிந்த னர்.கால்நடைமருத்துவர் செல்வராஜ்  தீக்காயத்தில் பாதிக்கப்பட்ட பசு மாட் டிற்கு, முதலுதவி சிகிச்சை அளித்தார்.

குடிசை தீப்பிடித்த சம்பவம் குறித்தும், குடிசை தீப் பிடித்தற்கான காரணம் குறித்தும், தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post