சத்தியமங்கலம் அருகே வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க விவசாயி யிடம் ரூ.6.ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாக 2 மின்வாரிய ஊழியர்களை, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் கைது செய்தனர்.ஈரோடு மாவட் டம் சத்திய மங்கலம் அருகே உள்ள ராம து பையலூரை சேர்ந்தவர் அருள் பாரதி விவசாயி. இவர் தனது வீட்டு க்கு மின் இணைப்பு வழங்க, சிக்கர சம்பாளையத்தில் உள்ள இளம் மின் பொரியாளர் அலுவலகத்தில் விண் ணப்பித்திருந்தார்.அப்போது அவரி டம் அங்கு பணியாற்றும் மின் பாதை ஆய்வாளர் பாலசுப்பிரபிரமணியம், போர்மேன் சண்முகம் ஆகியோர், வீட் டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ 6 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அருள்பாரதி, 'என்னால் அவ் வளவு பணம் கொடுக்க இயலாது. ரூ.6 ஆயிரம் தருகிறேன்' என்று கூறி யுள்ளார்.மேலும் அவரிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர்.லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி அருள் பாரதி. இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய் தார். அதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்ப போலீசார், ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் பணத்தை கொடுத்து அதை மின் ஊழியர்களிடம் கொடுக்குமாறு கூறினர்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு த்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறு முகம் தலைமையில் போலீசார் 2 ஜீப் கள் மற்றும் ஒரு காரில் சிக்கரசம் பா ளையம் சென்றனர். பாரதி நகரில் அருள் பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தட விய ரூ.6 ஆயிரம் நோட்டுகளை போர் மேன் சண்முகத்திடம் அளிக்க வந்த போது, சண்முகம் மின் பாதை ஆய் வாளர் பாலசுப்பிரமணியத்திடம் கொடுக்கசொன்னதின் பேரில்,அருள் பாரதி பணத்தை பாலசுப்ரமணியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக மின் ஊழியர்கள் பாலசுப்பிரமணியத்தை யும், சண்முகத்தையும் பிடித்து கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, மின் வாரிய அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு,2 பேரை யும் ஈரோட்டுக்கு அழைத்து சென்று. விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.