பிப்ரவரி 5ஆம் தேதி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு,மாநில அள வில், பி சி ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்த, தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பிற்படு த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட் டோர் சமூகத்தினர் கூட்டமைப்பு அறி விப்பு.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த, கரு தொட்டம்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணப்பகவுடர் என் பவரின் விவசாய தோட்டத்தில் மலம் கழித்த நபர்கள் மீது, நடவடிக்கை எடு க்க கோரி புகார் அளித்த கிருஷ்ணப் ப கவுடர் மீது பிசிஆர் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.இதனை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் பிசிஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற் றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற் படுத்தப்பட்டோர் சமூகத்தினர் சார்பில் பிப்ரவரி 5ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்த சத்தியமங்கலம் காவல்துறை யிடம் அனுமதி கோரி மனு அளித்த னர்.அதனை தொடர்ந்து இன்று சத் தியமங்கலம் துணை காவல் கண் காணிப்பாளர் எம்.எஸ்.சரவணன் தலைமையில், அமைதி பேச்சு வார்த் தை நடைபெற்றது.
இதில்,தமிழகவிவசாயிகள்பாதுகாப்பு சங்கம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத் தினர் காவல் துணை கண்காணிப் பாளரிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணப்ப கவு டர் மீது போடப்பட்ட வழக்கு குறித்து நியாயமாக விசாரணை நடை பெற்று வருகிறது விசாரணை முடியும் வரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.