கோவை பள்ளபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது

கோவை பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி பாரதப் பிரதமர்  நரேந்திரமோடி  தலைமையில் நடக்க உள்ள நிலையில் அதற்கான அழைப்பிதழை பாரதிபுரம் பள்ளபாளையம் சிந்தாமணி புதூர் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.விஜயகுமார் தலைமையிலும் பிஜேபி தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் நகர செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் மோகன், மற்றும் நகர நிர்வாகிகளான ரவிச்சந்திரன் தர்மராஜ், கனகராஜ், மாணிக்கம் சிவக்குமார் சுரேஷ் உள்பட நிர்வாகிகளுடன் இணைந்து அங்குள்ள மக்களுக்கு தாம்பூலம், அயோத்தி ராமர் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதம், விழா அழைப்பிதழ், மற்றும் ராமர்கோவில் படம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் இப்பகுதியில் அனைத்து மக்களுக்கும் அனைத்து அரசியல் கட்சியினரும் பெற்றுக் கொண்டு கோயில் கும்பாபிஷேக தினமான 22 ஆம் தேதி அன்று தங்களது வீட்டின் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று உறுதி கூறினார். பெரும்பாலானோர் தாங்கள் அழைக்கும் போது அயோத்தி ராமர் கோயிலுக்கு வருவதாக கூறினர். தற்போது வரை பள்ளபாளையம் பேரூராட்சி பகுதியில் 500க்கும் மேட்பட்ட குடும்பங்களுக்கு ராமர் கோவில் அழைப்பிதழ் ,ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை ,விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக வழங்கப்பட்டது .
Previous Post Next Post