தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புகளுக்கு கேட்டது ₹37 ஆயிரம் கோடி..ஆனா 37 பைசா கூட கொடுக்கல - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றசாட்டு


 தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புகளுக்கு
கேட்டது ₹37 ஆயிரம் கோடி..ஆனா 37 பைசா கூட கொடுக்கல - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றசாட்டு

மழை, வெள்ள நிவாரணம் வழங் குவதில் தமிழக மக்களை ஒன்றிய அரசு வஞ்சிப்பதுடன், பழிவாங்கும் நிலையில் செயல்படுவதாக தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு கேட்ட ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதியை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்தும், உடனடியாக நிவாரண நிதியை முழுமை யாக வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று ஆர்ப்பாட் டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மார்க் சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகம் இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்
துள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

ஒன்றிய குழுவினர் 2வது முறையாக ஆய்வு செய்ய வருகின்றனர். சுற்றுலா செல்வதுபோல் வந்து செல்கின்றனர். இதற்கு முன்பு என்னதான் செய்தார்கள் என்று தெரியவில்லை. வெள்ள நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடியை தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால் 37 பைசாகூட ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. தமிழக மக் களை பழிவாங்கும் நடவ டிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இயற்கை பேரிடர்களால் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு ரூ.5 ஆயிரம் கோடி அளவுதான் இழப்பீடு வழங்கி உள்ளது. அதாவது 4 சதவீத அளவுதான் இழப்பீடு வழங்கியுள்ளது.

ஆனால் பாஜக ஆளுகின்ற மாநிலங்கள், ஆதரவாக இருக்கின்ற மாநிலங்களுக்கு அவர்கள் கேட்ட தொகையைவிட கூடுதலாக வழங்கி இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் நிலையிலும், பழிவாங்கும் நிலையிலும் செயல்படுகிறது. 

தமிழக அரசு கேட்ட 37ஆயிரம் கோடியை வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும். இல்லை என் றால் அடுத்தகட்ட நடவ டிக்கையாக, பல்வேறு கட்சிகளை இணைத்து போ ராட்டம் நடத்தப்படும்.

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களது போராட் டம், நீதிமன்ற தலையீடு மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ஒத்திவைக்கப்பட் டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து தொழிலா ளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், பூமயில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் அர்ச் சுணன், ரவீந்திரன், ராஜா, பேச்சிமுத்து, சண்முகராஜ், அப்பாத்துரை, புவிராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Previous Post Next Post