கோவில்பட்டி: ரூ.25.35 இலட்சம் மதிப்புள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் : அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
கோவில்பட்டியில் ரூ.25.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை அமைச்சர் பி.கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி ஊராட்சி பூரணம்மாள் காலனியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.11.78 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், குலசேகரபுரம் ஊராட்சி பெருமாள்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கா.கருணாநிதி, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், முத்துக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் செல்வி (இலுப்பையூரணி), முரளிதரன் (குலசேகரபுரம்), ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதி, பரமேஸ்வரி, கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.