கோவை மருதமலை தைப்பூச தேர்திருவிழா நாட்களான 25.012024 மற்றும் 26.012024 ஆகிய நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா வருகின்ற 18.012024 முதல் 28.012024 முடிய மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. திருவிழாவில்
19.012024 -அன்று 
காலை 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் கொடியேற்றம்
24.01.2024 அன்று 
காலை 9.00 முதல் 10.00 மணி வரை திருக்கல்யாணம்
25.012024 -அன்று 
நண்பகல் 11.30 மணிக்கு தைப்பூசம் திருத்தேர் வடம் பிடித்தல்
26.012024 -அன்று 
தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைப்பெற உள்ளது.
மேற்கண்ட தைப்பூச தேர்திருவிழா நாட்களான 25.012024 மற்றும் 26.012024 ஆகிய நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லவும், மலைப்பாதையில் நடைப்பாதையாக செல்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மூலம் மலை கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். மேற்படி தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் துணை ஆணையர்(ம )செயல் அலுவலர் திருமதி. செ.வ.ஹர்சினி,ச.ஜெயகுமார், தலைவர். அறங்காவலர் குழு, மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வி. மகேஷ்குமார், ப.பிரேம்குமார், ஆ. கனகராஜன்,  வி.ஆர். சுகன்யாராசரத்தினம், ஆகியோர் செய்து வருகிறனர்
Previous Post Next Post