ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சோலை மெடிக்கல் சென்டரில் காதுவலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் என்பவரின் மனைவி வளர்மதிக்கு கடந்த23-ந்தேதி காய்ச்சல் இருந்ததால் உள்நோயாளியாக சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.27ந்தேதி இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் . மேலும் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வளர்மதியின் உறவினர்கள் சோலை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைபை முற்றுகையிட்டனர். அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்நிலையில் தவறான சிகிச்சை வழங்கி ஏழைப்பெண் வளர்மதியின் இறப்புக்கு காரணமான சோலை மருத்துவமனை மூடக்கோரி 28-ந்தேதி மதியம் வளர்மதியின் உறவினர்கள்,
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தலைமையில் போரட்டம் நடைபெற்றது, போராட்டத்தில் காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பூமிநாதன் நாடார், சான்றோர் மக்கள் கழகத்தின் தலைவர் சதா நாடார் கலந்து கொண்டனர், மேலும் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர் கவின் சங்கர் நாடார் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கேடி கோவிந்தசாமி நாடார், மாநில நிர்வாகிகள் அய்யாசாமி, ஈஸ்வரமூர்த்தி நாடார், முருகேஷ் நாடார் செந்தில்குமார் நாடார் பரமசிவம் நாடார், இளைஞரணி விக்னேஸ்வரன் நாடார், கௌரிசங்கர் பிரவீன் குமார், கலைவாணன், பொன்மணி நாடார்,மாவட்ட தலைவர்கள் கணேஷ் நாடார் ஜெயராஜ் நாடார், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நாடார், வடக்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன் நாடார், மாவட்ட நிர்வாகிகள் அர்ஜுனன் நாடார், சாரதி நாடார், சக்திவேல் நாடார்,ஒன்றிய தலைவர் பூபதி நாடார், ஒன்றிய நிர்வாகிகள் பெஸ்ட் சிவகுமார் நாடார், ரஞ்சித் நாடார், கேஎஸ் ஆறுமுகம் நாடார் கோவிந்தசாமி நாடார் வடிவேல் நாடார், யுவராஜ் நாடார், கௌரி சங்கர், மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.