கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி மூலம்  திறந்து வைத்தார் 
கோவை மாநகராட்சியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதே போல் ரேஸ்கோர்ஸ், பகுதியில் நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டு பிரம்மாண்ட மீடியா டவர், குழந்தைகளுக்கான விளையாடும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தது 
 இதில் தமிழ் எழுத்துகளை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, பொதுமக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. 
இந்நிலையில் குறிச்சி குளத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் 
Previous Post Next Post