கோவை மன்ப உல் உலூம் பள்ளியில் கடந்த 1993-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை மன்ப உல் உலூம் பள்ளியில் கடந்த  93 ஆம் ஆண்டு பயின்ற     முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்  பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்..
கோவை கோட்டை மேடு பகுதியில் பழமை வாய்ந்த பள்ளியாக   மன்ப உல் உலூம் பள்ளி செயல்பட்டு வருகிறது..இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் 93 ஆம் ஆண்டு  பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி போத்தனூர் சாலையில் உள்ள ஆனந்தம் மகாலில் நடைபெற்றது.. 30  ஆண்டுகளுக்குப் பிறகு  ஒரே இடத்தில் சந்தித்த மாணவர்கள்  கட்டித்தழுவி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.. தொடர்ந்து மாணவர்கள் மேடையி்ல் ஏறி,முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் 
வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அசைபோட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பழைய விளையாட்டுகளை நினைவு படுத்தும் விதமாக பம்பரம்,எறிபந்து,போன்ற விளையாட்டுகளை காட்சி படுத்தியும்,மாணவர்களே விளையாடியும் மகிழ்ந்தனர்..அதே போல நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பழைய நினைவுகளை நினைவு படுத்தும் விதமாக, பொரி உருண்டை, சீடை, நெல்லிக்காய், கமரக்கட்டு, தேன் மிட்டாய், கடலை பருப்பி,  ஆரஞ்சு மிட்டாய், சக்கர மிட்டாய், தேன் மிட்டாய் போன்றவற்றை வழங்கினர்.. நிகழ்ச்சியின் நடுவே  உடன் படித்த நண்பர்கள் சிலர் மறைந்த நிலையில் அவர்களது படத்திற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்..இந்நிகழ்ச்சியை 93 ஆம் ஆண்டு மாணவர்கள் சதக்கத்துல்லா,எஸ்.ஆர்.அப்பாஸ் கரும்புகடை சாதிக்,மலர் அப்பாஸ்,பாரூக்,சிக்னல் ரபி,ஜப்பான் இஸ்மாயில்,சாலி,உமர்ஷா,லேனா இப்ராஹீம்,புக் இதாயத்துல்லா,எக்ஸ்போ உபைது ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..
Previous Post Next Post