கோவை சிம்மகுரல் கலைக்குழுவின் சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவில் 150 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு நடனம்



கோவை சிம்மகுரல் கலைக்குழுவின் சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மி  அரங்கேற்ற விழாவில் 150 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடியதை ஏராளமானோர் கண்டு களித்தனர்.....  
கொங்கு நாட்டு பாரம்பரிய கலைகளில் முக்கியமான கலையாக கருதப்படுவது வள்ளி கும்மியாட்டம்.அழிந்து வரும் வள்ளி கும்மியாட்ட கலையை மீட்டெடுக்கும் விதமாக இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.திரளான பெண்கள் கூடி பம்பை இசை முழுங்க கிராமிய பாடல்களுக்கு நடனமாடி மகிழ்வது விழா காலங்களில் தனிச்சிறப்பு.
இந்த நிலையில் கோவை பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் மனியகாரன்பாளையம் சிம்மக்குரல் கலைக்குழுவின் வள்ளிக்கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி பகுதியிலுள்ள கௌமார மடாலயம் வளாகத்தில் நடைபெற்றது.இதனை சிரவை ஆதினம் இராமனந்த குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சிம்மகுரல் கலைக்குழு தலைவர் சதிஷ்குமார், கலைக்குழு ஆசிரியர் நவீன் குமார் ஜெகநாதன், இணை ஆசிரியர் பிரகாஷ் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இதில் பம்பை ஆசான் செல்வம் என்ற பொன்னுச்சாமியின் பம்பை இசைக்கு ஏற்றபடி கிராமிய பக்தி பாடல்களை பாட அதற்கு ஏற்றாற் போன்று சிறுமியர்கள் மற்றும் இளம்பெண்கள்,கலைஞர்கள் வண்ண உடைகளுடன் காலில் சலங்கை கட்டி ஒருசேர நடன அசைவுகளை வெளிப்படுத்தி கூடியிருந்த பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திரளானோர் கண்டு களித்தனர். இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் வள்ளி கும்மி ஆசிரியர் சுப்பிரமணியன் ,அம்மன் கலைக்குழு தலைவர் நஞ்சு குட்டி, ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, ஒயிலாட்ட ஆசிரியர் கனகசபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post