தூத்துக்குடி : உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் 1300 ஆட்டோ டிரைவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு- இளைஞரணி நிர்வாகி ஜோயல் வழங்கினார்
தூத்துக்குடியில் 1300 ஆட்டோ டிரைவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரூ.22 லட்சம் மதிப்பிலான பருப்பு. எண்ணெய், சீருடை. போர்வை என தலா ரூ.1750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பை திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டத் தலைவரும். திமுக இளைஞர் அணி தெற்குமாவட்டதுணைச் செயலாளருமான பால் துரை தலைமை வகித் தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் வழங்கினார்.
இதில் முன்னாள் பகுதி செயலாளர் பென்னி, பாபு, சாயர்புரம் முன்னாள் பஞ்சா யத்து தலைவர் பொன் சேகர். விவசாய அணி மகேந்திரன், இளைஞரணி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜோ. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் டினோ, இளைஞ ரணி தூத்துக்குடி மாநகர துணைச் செயலாளர்கள் பிரவின், முகமது. உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் சேக்முகமது. மாவட்ட துணை தலைவர் காளீஸ்வரன். மாவட்டதுணைச் செய லாளர்கள் நட்ராஜ். திருச்செந்தூர் சுரேஷ். மாவட்டதுணை பொரு ளாளர் பிரதிப், மாநகர தலைவர் ராஜா, மாநகர செயலாளர் தளபதி முருகன், நற்பணிமன்ற ஒன்றியச் செயலாளர்கள் ஓட்டப்பிடாரம் சிலுவைப்பட்டி பாரி. விளாத்திகுளம் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.