மதுரை மாநாட்டுக்கு திருப்பூரில் இருந்து 120 வாகனங்கள் பயணம்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழி அனுப்பி வைத்தார்

மதுரையில் இன்று நடைபெற உள்ள எஸ்.டி. பி.ஐ., கட்சியின் மத சார்பின்மை மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.இந்த மாநாட்டுக்கு திருப்பூரில் இருந்து எஸ்.டி. பி.ஐ ., கட்சி சார்பில் 120 வாகனங்களில் அந்த கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் என  5 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர்.  திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மாநாட்டுக்கு செல்லும் பேருந்துகளை தொடங்கி வைத்து பேசினார். 

இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தான் வாழ்ந்த காலம் வரையிலே ஒவ்வொரு ஆண்டும் ரமலான் நோன்பை மிக சிறப்பாக உலக வர்த்தக மையத்தில் நடத்தினார்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சி ஆக இருந்தாலும் இஸ்லாமிய சமுதாயத்திற்குரிய கண்ணியத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்து மிக சிறப்பாக நடத்தியவர் நம்முடைய அன்புத்தாய் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மாவின் வழியிலே வந்த எடப்பாடியார் அவர்கள் ரமலான் நோன்பு என்றால் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அம்மா அவர்கள் என்னென்ன சலுகைகளை அளித்தார்களோ அந்த சலுகைகளை எல்லாம் தொடர்ந்து அளித்து இஸ்லாமிய சமுதாய மக்களை தன் மீது கண்களாக பாவித்தவர் அண்ணன் சேலம் தந்த சொக்கத்தங்கம் எடப்பாடி அவர்கள் ஆவார்கள். எங்களை போன்றவர்கள் வளர்ப்பு முறையிலேயே சிறுவயதிலேயே காலம் காலம் தொட்டு சிறுபான்மை சமுதாயத்தோடு ஒன்றி உறவாடி மாமன் மச்சான்களாக அண்ணன் தம்பிகளாக ஒட்டுமுறை உறவுகளாக வாழ்ந்து வந்தவர்கள் இடையிலே சில பிரிவினை சக்திகள் நம்மையும் உங்களையும் பிரித்து வைத்திருந்தாலும் இன்றைக்கு நம்முடைய நபிகள் நாயகத்தினுடைய அருளாலும் எல்லாம் வல்ல இறைவனுடைய அருளாலும் இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகவமும் எஸ்பிபிஐ சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மதச்சார்பற்ற கொள்கை மிக்க இந்த இரண்டு கட்சிகளும் இன்றைக்கு ஒன்றாக இணைந்து மதுரையிலே வரலாற்று சிறப்புமிக்க ஒரு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக செல்லும்
காட்சியை கண்டேன். என்று சொன்னால் இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டும் இணைந்த ஒரு குடும்பமாக பயணிக்க தொடங்கிவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. மாண்புமிகு எடப்பாடியர்  தலைமையிலே இன்றைக்கு மதுரையிலே உங்களுடைய கட்சினுடைய தலைவர் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களும் சிறப்புரை ஆற்ற  இன்றைக்கு ஒரு புதிய வரலாற்றை தோற்றுவிக்கப் போகிறார்கள். சிறுபான்மை சமுதாய  சகோதரர்களை  ஏமாற்றியவர்களை இதுவரை ஏமாற்றி உங்களுடைய வாக்குக்களை பெற்று உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவருடைய முக சாயத்தை இன்றைக்கு போக்குகிறார்கள். இந்த சகோதரத்துவம் தொடர வேண்டும். அதற்கு எடபபடியார் நல்வழி காட்டுவார். என்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, சு.குணசேகரன், கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி,  அதிமுக நிர்வாகிகள் கேசவன், விபிஎன் குமார், ஹரி ஹரசுதன், கண்ணபிரான், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஆண்டவர் பழனிசாமி, தஸ்தகிர், பர்மானுல்லா, எஸ்.டி. பி.ஐ., கட்சி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் விகேன் பாபு, போது செயலாளர் இதயதுல்லா, துணை தலைவர் அப்துல் சத்தார், மாவட்ட செயலாளர் அன்வர், பொருளாளர் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்....
Previous Post Next Post