கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பால் கம்பெனி கிளை சார்பாக 11-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா

கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பால் கம்பெனி கிளை சார்பாக 11 ஆம்  ஆண்டு ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது 
அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின்  பால் கம்பெனி கிளை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பன்  திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.. இதன் தொடர்ச்சியாக பதினோராவது  ஆண்டாக ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா கடந்த 27 ந்தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன்  துவங்கியது. விழாவை முன்னிட்டு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து  அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப தேச விளக்கு தேரோட்டம் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் ரதத்தின் முன்பாக நாதஸ்வரம், உடுக்குப்பாட்டு, தாலபொலி, சிங்காரி மேளம், தையம், பூக்காவடியுடன், பக்தர்கள் கையில் விளக்கை ஏந்தி நடனமாடியபடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது
ஆர்.எஸ்.புரம், லாலிரோடு பெரிய மாரியம்மன் கோவிலின் முன்பாக பட்டாசுகள் வாண வேடிக்கையுடன் துவங்கிய திருவீதி உலாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் படி பூஜை, மற்றும் ஸ்ரீ கோவில் பூஜை செய்யப்பட்டது.. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்பன் சேவா சங்க பால்கம்பெனி கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர் 
Previous Post Next Post