கோபி கொளப்பலூர் ஸ்ரீ பச்சைநாயகி அம்மன்கோயில் குண்டம் விழா

 கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஸ்ரீ பச்சை நாயகி அம்மன் திருக் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினா்.கையில் குழந்தையுடனும்,அக்னி சட்டி ஏந்தியும், தீ மிதி்த்து வேண்டுதல் நிறைவேற்றினர்.கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மன் கோவில் பதிஸ்ரீ பச்சை நாயகி அம்மன் திருக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழமையான பச்சை நாயகி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கோயில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்,கடந்த 13ம் தேதி கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 25 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 27 ம் தேதி மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று 

காலை குண்டம் விழா தலைமை பூசாரி தென்னரசு பூஜை செய்து குண்டம் இறங்கி தொடங்கிவைத்தார். ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திகடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. அம்மன் கோயில்பதி ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

Previous Post Next Post