அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.!


 அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் /கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Previous Post Next Post