பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் சிறை பிடிப்பு- உயர்நீதிமன்றம் உத்தவு.!
தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எம்.வி.ரஹிமா என்ற கப்பலான எம்.வி.புர்வலன்1 என்ற கப்பலை பணியாளர் ஒப்பந்தப்படி ஊதியம் வழங்காததால் சிறைபிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 20, 2022 தேதியிட்ட பணியாளர் ஒப்பந்தத்தின் கீழ் கப்பலின் உரிமையாளர்கள் ஊதியம் வழங்காததை எதிர்த்து அக்கப்பலில் பணிபுரிந்த நந்தகுமார் என்ற மாலுமி நீதிமன்றத்தை அணுகிய வழக்கில் நீதிபதி ஜே அப்துல் குத்தூஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நந்தகுமார் மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தில் கப்பலில் பணியில் சேர்ந்ததாகவும், 13 மாத கால வேலை ஒப்பந்தம் என்றும், ஜூலை 24, 2022 முதல் அவருக்கு மாதம் $370 சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் அவருக்கு நிலுவையில் உள்ள சம்பளம் மட்டும் 4.5 லட்சம் ரூபாய். ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து, உரிமையாளர்கள் ஊதியம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. 13- மாத சம்பளத்தில் 50,000 மட்டுமே தனக்கு வழங்கப்பட்டதாக நந்தகுமார் கூறினார்.
பணியாளர்கள் தங்களுக்கு உணவு மற்றும் உயிர்வாழ்வதற்கான ஏற்பாடுகள் வழங்கப்படவில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக வர்த்தக நடவடிக்கை இல்லாமல் கப்பல் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கப்பல் நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்பட்டதால், உரிமையாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதாக உறுதியளித்தனர், ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை, இது குறித்து
ஒப்பந்தத்தை மீறியதாலும், ஒப்புக்கொண்ட விதிமுறைகளின்படி சம்பளம் வழங்காததாலும், நந்தகுமார் மற்ற பணியாளர்களுடன் சேர்ந்து உரிமையாளர்களுக்கு பல மின்னஞ்சல்களை அனுப்பினார். பணம் செலுத்தாததால், உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு சரக்குகளுடன் வந்த இந்த கப்பல், மீண்டும் அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு கிளம்புகையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத வழக்கில் கப்பலை சிறைபிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.