கோவை ஆலய சேவா அமைப்பை சேர்ந்த ரவிச்சந்திரன் அமைப்பாளர் தலைமை தாங்கினார் . வரவேற்புரை பழனிச்சாமி பூசாரி மாசாணி அம்மன் கோவில் மற்றும் கிராம கோவில் பூசாரி பேரவையில் நிர்வாகி இந்நிகழ்ச்சியில் முன்னிலையாக வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொது செயலாளர் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆலய சேவை அமைப்பின் நிர்வாகிகளான வித்தியா தீபா ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியானது செவ்வாய்க்கிழமை 05- 12- 2023தேதி மாலை 6.30மணியளவில் பள்ளபாளையம் அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில் பாரத உலகின் குருவாக வேண்டியும் நாட்டில் அனைத்து மக்களும் நலமுடன் இருக்கவும் அவர்களுடைய வேண்டுதல்கள் இதுவரை தடங்கலா இருந்த செயல்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கவும் சிறப்பு யாகமும் சிறப்பு மந்திரங்களும் உபதேசிக்கப்பட்டு அதை திரும்ப கலந்து கொண்ட அனைத்து பெண்களையும் உச்சரிக்க வைத்து அவர்களுக்கு மன நிம்மதியை ஏற்படுத்த வைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் விஸ்வஹிந்து பரிசுத் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் பேசுகையில்நமது நாட்டின் பல நூற்றாண்டுகளாகமொகலாய அரசர்களால் சிதைக்கபட்ட சிதிலமடைந்த ராமர் ஆலயம் பாரத நாட்டு மக்களின் சிறப்பு பிரார்த்தனைகள் சிறப்பு யாகங்கள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டதன் பலனாக இப்பொழுது பாரதப் பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி தலைமையில் 2024 ஜனவரி 22 அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது சம்பந்தமாக அங்கு அர்ச்சிக்கப்பட்ட அர்ச்சனை பொருட்களும் அழைப்பிதழும் வரும் ஜனவரி 1-ல் இருந்து 15 வரை அனைத்து சமுதாய மக்களுக்கும் கொடுத்துள்ளதாகவும் கும்பாபிஷேக தினத்தின் மாலையில் அனைத்து மக்களும் வீட்டின் முன்புறத்தில் ஐந்து கார்த்திகைவிளக்குகள் ஏற்றி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றியும் அனைத்து மக்களும் நலமுடன் இருக்க ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை ஒன்பது முறை சொல்ல வேண்டும் என்றும் விளக்கி கூறப்பட்டது மேலும் விருப்பப்பட்டு வருகிறவர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்வது என்றும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.