கோவை சூலூரில் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் அணி வாரியாக நிர்வாகிகள் கூட்டம்

கோவை சூலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் கிளைத் தலைவர்கள் மற்றும் 2 -ம் பார்வையாளர்கள் அணி பிரிவு நிர்வாகிகள் என அனைவருக்குமான அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழை எவ்வாறு பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது  மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற மாநில தலைமை அறிவுறுத்தலின் பேரில் அனைத்து நிர்வாகிகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக நிர்வாகிகள் கூட்டம் பாரதிய ஜனதா கட்சி சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார்  தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கேயம்பாளையம் பழனிச்சாமி  மேற்பார்வையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி சூலூர் கிழக்கு மண்டலின் பார்வையாளர் மாவட்டச் செயலாளர் நட்ராஜ்   தரவு மேலாண்மை மாவட்ட தலைவர் ராஜ்குமார் சூலூர் நகர பார்வையாளர் கே.அசோக் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆடிட்டர் வெங்கட்ராமன் அவர்களது சீரிய முயற்சியில் ராமர் விக்கிரகத்திற்கு மலர் தூவி வழிபாடு நடத்தி  கூட்டமானது தொடங்கப்பட்டது. மண்டல் பொருளாளர் மகேஸ்வரன் வரவேற்பு நிகழ்த்த மண்டல் பொதுச் செயலாளர் நந்தகோபால் அருண்குமார் வழிகாட்டுதலில் பூத்து வாரியாக 50 புதிய  உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தினசரி காலண்டர் வழங்கப்பட்டு  நிகழ்ச்சி முடிவு பெற்றது மேலும் 
 இந்த நிகழ்ச்சியில் 10 -க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்
Previous Post Next Post