நம்பியூர் திட்டமலை ஸ்ரீபெரியநாயகி சமேத கைலாசநாதர் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.
முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன்
ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கிவைத்தார்.
நம்பியூர் டிச:2,
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், கோசனம் கிராமம்,திட்டமலை அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் புணராவர்தன அஷ்டபந்தனமஹா கும்பாபிஷேக விழாநடைபெற்றது.
கடந்த மாதம் 26ந் தேதி மகாகணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,தீபாரதனையுடன் விழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து மூன்று கால யாக பூஜைகள் நடந்தது, இன்றுநான்காம் காலயாக பூஜை தொடங்கிவிக்னேஸ்வரா பூஜை,யாகசாலை பூஜைகள்,மூலமந்திர ஹோமம், திரவிய ஹோமம் நாடி சந்தானம். யாத்ரா தானம்ஆகியவைகள் நடைபெற்று கலசங்கள் புறப்பட்டு கோபுரங்களுக்களில் உள்ளகலசங்களுக்கு
சிவாச்சாரியார்களால்புனித நீர் ஊற்றிமகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாகஸ்ரீ மூல விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ பெரிய நாயகி சமேத கைலாசநாதர் பெருமாளுக்கும், படுவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன்,நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் ஹரி,செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பாளர்) சீனிவாசன்,மற்றும் விழா குழுவினர், கோசனம் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.கும்பாபிஷேக விழாவில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் அருந்தி சென்றனர்.
முன்னதாக நம்பியூர் கலை குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டத்தைமுன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன்,ஒன்றிய செயலாளர் தம்பி சுப்ரமணியம் ஆகியோர்தொடங்கி வைத்தனர்