தூத்துக்குடி மாவட்ட கனமழை: பாதிப்புக்குள்ளான மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு.!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பார்வையிட்டு இன்று (31.12.2023) ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து முத்துநகர் காய்கறி மார்கெட்டில் இருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் பணியினை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய உரிய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்கள். மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக 5 கிலோ அரிசி பை 1000 மூட்டைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி நகர்மன்றத்தலைவர் கருணாநிதி, முக்கிய பிரமுகர் ஆனந்தசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.