மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் ஆற்றும் சமூக பணிகளுக்கு பாராட்டு

*மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் ஆற்றும்  சமூக  பணிகளுக்கு பாராட்டு !*            மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நேரில் சால்வை அணிவித்து பாராட்டினார். இதுகுறித்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக வேண்டும் என்று போராடிய நாட்களில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெக வீரபாண்டியன் அவர்களோடு இணைந்து தொடர்ந்து போராடினோம். தற்சமயம் புதிய மாவட்டமாக உருவான பிறகு மயிலாடுதுறை பூம்புகார் குத்தாலம் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உடனுக்குடன் தீர்வு காண்கின்ற ஒரு ஒப்பற்ற நிலை ஏற்பட்டது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட மாவட்டத்தின் வளர்ச்சியில் மிகுந்த கவனமும் ஆர்வமும் கொண்டுள்ள நாங்கள் நம்முடைய பகுதி மக்களினுடைய தேவைகளை எத்தளத்திலும் எடுத்துரைத்து நல்ல பலன்கள் விரைந்து கிட்டிட வேண்டும் என்பதற்காக எங்களை அர்ப்பணித்து ஒவ்வொரு நாளும் பணியாற்றி வருகின்றோம். இப்பணிகளை கவனித்து, நன்கு உணர்ந்த காரணத்தினால்மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி அவர்கள் இன்றைய தினம் எனக்கு சால்வை அணிவித்து பாராட்டியது என்பது மிகமிக மகிழ்ச்சி அளிக்கின்றது. என்னுடைய பணி மென்மேலும் இன்னும் எப்போதும் நம் மக்களுக்கு அதிகமாக செய்து  கொடுத்து அவர்கள் மகிழ்வே எனக்கு பாராட்டு என்பதை உணர்ந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்று சபதம் ஏற்கின்றேன். மாவட்ட ஆட்சியர் அவர்களுடைய இப்படிப்பட்ட நல் பண்புகள் மற்ற அலுவலர்களுக்கும் சென்று மாவட்ட ஆட்சியரின் கனவான தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டம், முதன்மை மாவட்ட மயிலாடுதுறை என்னும் இலக்கையும் பெருமையையும் விரைந்து எட்டிட அத்தனை அலுவலர்களும் அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சி நண்பர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வரும்  2024 மயிலாடுதுறைக்கு மேலும் மகத்தான ஏற்ற மிகு ஆண்டாக அமையும் என்பது உறுதி. அதற்காக அனைவரும் பாடுபடுவோம் ஒத்துழைப்போம் என்று மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்ற சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவித்தார்.

 
Previous Post Next Post