தூத்துக்குடி : அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அந்தோனியார்புரம் பாலத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு.!


 தூத்துக்குடி : அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அந்தோனியார்புரம் பாலத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு.!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,இன்று (23.12.23) தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மறவன்மடம் ஊராட்சி அந்தோனியார்புரம் பாலத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.


பின்னர் தூத்துக்குடி பைபாஸ் பாலம் அருகில் செங்குளம் ஓடையிலிருந்து உப்பார் ஓடைக்கு செல்லும் மழை நீர் வடிகால் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Previous Post Next Post