புயல் பாதிப்பு - "முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டு கோள்.!
#CycloneMichaung ஏற்படுத்தியுள்ள இயற்கைப் பேரிடரால் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய #TNCMPRF-க்குத் தாமாக முன்வந்து நிதி அளித்து வரும் நல்லுள்ளங்களுக்கு நன்றி.
நானும் என்னுடைய ஒரு மாத ஊதியத்தை மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக அளிக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து MLA, MP-களும் அளித்திட வேண்டுகிறேன்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என பொதுமக்களுக்கு வேண்டுகோள்.