கோபிசெட்டிபாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

 கோபிசெட்டிபாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திரும்ப பெற கோரி இன்று வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த பேரணி மற்றும் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனர்இந்த நிலையில்  கோபி கோழி திருடியதாக தாக்கப்பட்ட வழக்கில் -  வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு சம்பந்தமாக பாதுகாப்பு நலன் கருதி 


கோபி பகுதியில் காவல்துறை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜவகர்  தலைமையில் 3- ADSP கள், 7- DSP-கள் ,20 ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார் -170, ஊர்க்காவல் படையினர், மற்றும் 500 ஒழுங்கு போலீசார் மொத்தம்-750 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வருண் -1, வஜ்ரா-3, வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post