கிராமஅஞ்சலக ஊழியர்கள் நாடுதழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம். - சத்தியமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.


கிராமஅஞ்சலகஊழியர்களுக்கு எட்டு மணிநேர வேலை,மற்றும்ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும்,ஊழியர் களுக்கு எதிரானஅடக்கு முறையும், சொந்த செல்போன்களை அலுவலகப் பணிக்குபயன்படுத்தகட்டாயப்படுத்த கூடாது. எனவும், கிராம அஞ்சலகங்க ளுக்கு,மடிக்கணினி,பிரிண்டர், அதி வேக இணைய சேவை ஆகியவை வழங்கி சேவை தரத்தை உயர்த்த வேண்டும் என்பன உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி,அகில இந் திய கிராமிய அஞ்சலக ஊழியர் கள் சங்கத்தின் சார்பில் டிச12 முதல் காஷ்மீர் முதல் கன்னி யா குமரி வரை கிராம அஞ்சலக ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டு உள்ளனர். இதனால் கிராமபுற பகுதிகளில்ஆதார்அட்டைவிநியோகம்,தேர் தல்ஆணையகடிதவிநியோகம்  தபால் சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ள நிலையில், 

வேலைநிறுத்ததிற்குஆதரவாக ,சத்தி யமங்கலம் தலைமை தபால்நிலையம் முன்பு,கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தின்சார்பில்,கண்டனஆர்ப்பா ட்டம்நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி சத்திய கலா தலைமை தாங்கினார்.சங்கசெயலாளர் ராஜேந் திரன்மற்றும் லதா ஆகியோர் முன்னி லை வகித்தனர். கிராமிய அஞ்சலக ஊழியர் சங்க நிர்வாகி ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாள வாடி, சத்தியமங்கலம், புளியம் பட்டி, பவானிசாகர்ஆகியபகுதியில்இருந்து கிராமியஅஞ்சலகஅலுவலர்கள்,உதவிஅஞ்சலகஅலுவலர்கள்60க்கும்மேற்பட்டவர்கள்கலந்துகொண்டு,கோரிக  கைகளை வலியுறுத்தி,கண்டன முழக் கங்கள் எழுப்பினர் நிறைவாக சங்க நிர்வாகி முருகேஷ் நன்றி கூறினார்.

Previous Post Next Post