இந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சசூரி கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில பொதுச்செயலாளர்கள் முரு கானந்தம், பரமேஸ்வரன், அரசுராஜா, கிஷோர்குமார், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, ஆர்.எஸ். எஸ். தென் தமிழக அமைப் பாளர் ஆறுமுகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அயோத்தி ராம ஜென்ம பூமி வரலாறு குறித்த புத்தகத்தை மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-
இந்துக்களின் பண்பாடு, வழிபாடு மற்றும் வாழ்வியல் அடையாளங்களான கோவில்களை அறநிலையத்துறையானது பாதுகாத்து, பராமரித்து அதன் மூலம் இந்து மதத்தை பாதுகாக்கவோ, பரப்பவோ துளியும் முயற்சிக்கவில்லை. மாறாக இந்து மதத்தை அழிக்க மட்டுமே கோவில்களை பயன்படுத்துகின்றன. கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசை வெளியேற்றினால் மட்டுமே கோவில்களை காக்க முடியும். தமிழகத்தில் உள்ள பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள் என ஒவ்வொருவரையும் கண்காணித்து பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனரா என ஆராய்ந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு காவல்துறை முன்வர வேண்டும்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்படும் கோவில் களில் பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் பக்தர்களை தரக்குறைவாக பேசுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் - அரங்கேறி வருகிறது. பழனி,திருச்செந்தூர் தொடங்கி ஸ்ரீரங்கம் வரை பக்தர்கள் மீது தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு காரணமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.