மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள், வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும். தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்ற னர். இந்நாளில்,உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல் வர்.மும்மூர்த்திகளில் முதற் கடவுளாக காக்கும் தெய்வமாய்,லக்ஷ்மி மணா ளன் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணராக எழுந் தருளி, சத்தியமங்கலம் வடக்குப் பேட் டை திரு. வி. க. நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் திருக்கோயிலில், வைகு ண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழாநிகழ்ச்சியில்,இன்றுஅதிகாலை 05.30 மணிக்குசொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.
காலை 06.30 மணிக்கு மஹா தீபாரா தனை நடைபெற்று, பின்னர்காலை 7.00 மணிக்கு மகா அன்ன தானம் நடைபெற்றது..இதில் ஏராளமான பக்தர்கள் திருக்கோவில்
வடக்கு வாசல் என்னும் சொர்க்க வாச ல் வழி யாக,பக்தகோடி பெருமக்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்த னர். இன்று வெகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சுமி நாராயணர் சந்தா னலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள்பாலித்தார்.