ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பு- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் (டாஸ்) சார்பாக மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி.!


 ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பு- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் (டாஸ்) சார்பாக மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி.! 


இது தொடர்பாக தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் (டாஸ்) சார்பாக மாநில செயலாளர் ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-


"தமிழ்நாட்டில் சுகி. சுமோட்டோ போன்ற உணவு வினியோகம், மின் வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட  அனைத்து வகை வணிக பொருட்களின் வினியோகங்கள், இணைய செயலி வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது "கிக்" என்ற வரையறுக்கப்படாத கூலி பெறும் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். தற்போது இணையவழி சேவைகள் "கிக்" என்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.


தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு வினியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுப்பட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சுதந்திர தினவிழா உரையில் அறிவித்தார். 


அதை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட கிக் தொழிலாளர்களின் வாழ்வில் உழைப்புக்கான அங்கீகாரத்தையும், வாரியம் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற உடனடி நடவடிக்கை எடுத்த  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் (டாஸ்) சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என மாநில செயலாளர் ஜெபசிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post