மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலெக்சன் டீம் என்ற சட்டவிரோத குண்டர்களை தெருக்களில் நடமாடாமல் தடுப்பது எப்படி என்ற உள்ளரங்கு பொதுக்கூட்டம் திருப்பூர் மண்ணரை ஸ்ரீ சண்முக தேவர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மக்கள் ஜனநாயகம் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். நிறுவனத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் செய்தியாளர்களிம் பேசிய மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக தலைவர் இப்ராஹிம் பாதுஷா ‘ திருப்பூரில் ஆளும் அரசு, நீதிமன்றம், காவல்துறையின் கண்களில் மண்ணை தூவி, திட்டமிட்டு ஏழை எளிய மக்களை கடனில் திணித்து, ரவுடிகள் மிரட்டுகிறார்கள். கலெக்சன் டீம் என்ற பெயரில் ஆர்.பி.ஐ., சட்டத்தை மீறி மக்களை மிரட்டுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கடன் வாங்கிய நபரின் வீடுகளுக்கு குழுவாக சென்று ஆபாச வார்த்தைகள் பேசி மிரட்டும் சட்டவிரோத குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்' என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் பொதுச் செயலாளர் சுந்தரம்,அவை தலைவர் பாலசுப்பிரமணியம், தலைமை ஒருங்கிணைப்பாளர் குலாப் ஜான், முதன்மைச் செயலாளர் பிரகாஷ், இளைஞர் தலைவர் பாரூக் இளைஞர் அணி செயலாளர் இல்முதீன், திருப்பூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், சிறப்பு விருந்தினர்களாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சதாம் உசேன், சிராஜுதீன், உபைத் அலாவுதீன் மஜீத், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், அபுதாஹீர், தங்கத் தாரகை அமைப்பின் மாநில செயலாளர் ஷாஜகான், அஇஅதிமுக கேரளா இளைஞரணி செயலாளர் முஸ்தபா, தமிழின மறுமலர்ச்சி கழகத்தின் தலைமை பேச்சாளர் பரகத்துல்லாஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.