தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை வலியுறுத்தும் புதிய முயற்சியாக "ஈட்ரைட் மில்லட் யோகா" நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
பொது மக்கள் மத்தியில் நன்கு சீரான உணவின் முக்கிய அங்கமாக தினை நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் "ஈட்ரைட் மில்லட்" என்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது... ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக சிறு தானியங்களை தினசரி உணவில் சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, பனிவரகு, குதிரைவாலி, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களில் புரதம், இரும்பு, வைட்டமின்-பி, நார்ச்சத்து, கால்சியம், பைட்டோகெமிக்கல்கள் சத்துக்கள் நிறைந்துள்ளது அவற்றை உட்கொள்வதால் பல்வேறு சுகாதார நலன்கள் ஏற்படுகிறது.
இதுபோன்ற சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவுகிறது. உடற்தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற இதுஒரு நல்லவாய்ப்பாக அமையும்.இதன் ஒரு பகுதியாக,
மேலும், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் குறைந்த நேரத்தில் அதிக ஆசனங்கள் செய்து உலக சாதனை படைக்கும் புதுமையான ("ஈட்ரைட் மில்லட் யோகா” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.. சிறுதானியங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் யோகா"அதிகபட்ச ஆரோக்கியத்திற்கான அதிகபட்ச ஆசனங்களில் உலக சாதனை முயற்சி") யோகா நிகழ்ச்சி நடைபெற்றது…ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் 2184 மாணவர்கள் கலந்து கொண்டு 67 ஆசனங்களை 16 நிமிடங்கள் மற்றும் 34 வினாடிகளில் செய்தனர். ஒரு ஆசனத்திற்கு 14 நிமிடங்கள் மற்றும் 8 வினாடிகளில் செய்து குறைந்த நேரத்தில் அதிக ஆசனங்கள் செய்து உலக சாதனை படைத்தனர். இந்த குறிப்பிடத்தக்க சாதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு "ட்ரையம்ப் உலகப் பதிவுகளில் (TRIUMPH WORLD RECORDS) பதிவு" செய்யப்பட்டுள்ளது…இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் முனைவர் தங்கவேலு, கல்லூரியின் முதல்வர் ரவிக்குமார், மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, முனைவர். ஷாலினி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.