புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை வரவேற்கும் நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ

 

புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை வரவேற்கும் நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ

இன்று (30.12.2023) நன்பகல் 12.05 மணியளவில் புதிய வழித்தடமாக கோயம்புத்தூர் முதல் பெங்களூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையினை மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடிஅவர்கள் இன்று அயோத்தியில் நடைபெற்ற விழாவில் துவக்கி வைத்தார். கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் வழியாக ஈரோடு ரயில் நிலையத்திற்கு நன்பகல் 1.20 மணியளவில் வந்தடைந்தது. அதனை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம் முன்னிலையில் கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மலர் தூவி வரவேற்று மகிழ்வினை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில் நிலைய ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வின் முடிவில் 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலினை சட்டமன்ற உறுப்பினர்  பச்சைக்கொடி அசைத்து ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் துவக்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது பெங்களூர் புறப்பட்டு சென்றது.

Previous Post Next Post