கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட அளவிலான கபடிப்போட்டிகள் தொடக்கம்!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா காங்கேயம் சாலை காயத்ரி மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். 
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம்  திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பானவர், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . திருப்பூர் மாவட்ட விளையாட்டு - இளைஞர் நலன் அலுவலர் (பொறுப்பு) சிவரஞ்சன்  வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து விழா விழாப்பேருரை ஆற்றினார்கள். முன்னதாக கபாடிப் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டது. ஓபன் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டன ஆண்கள் பிரிவில் 46 அணிகளும் பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு திருப்பூர் மாவட்ட கபாடி கழகத்தின் சார்பில் பரிசுக்கோப்பைகளுடன் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000, பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.7,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.3,000 வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கபாடி கழக சேர்மன் முருகேசன், துணை சேர்மன் முருகானந்தம், தலைவர் நாச்சிமுத்து, துணைத்தலைவர்கள் ராமதாஸ்,  நாகராஜ், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி, செய்தித் தொடர்பாளர் சிவபாலன், காவல்துறை ஆய்வாளர் கணேசன், மாவட்ட கபாடி கழக நடுவர் குழு சேர்மன் நல்லாசிரியர் முத்துச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Previous Post Next Post