*பிரீ பெய்டு மின் மீட்டர் விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில சேர்மன் ஆர்.எல்.வெங்கட்டராமன் வெளியிடும் அறிக்கை.*
புதுச்சேரியில் அரசு பிரீ பெய்டு மின் மீட்டர் பொருத்தி முன் கூட்டியே மின் கட்டணத்தை பெற்று அதன் மூலம் மக்கள் மின்சாரம் பெரும் திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்த இருப்பதாக அறிவித்தது முதல் , எம் எல் ஏக்களும், அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின் துறையை தனியார் மயம் ஆக்குவதை கண்டித்து மின் துறை ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர் . நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர் . அதன் விளைவாக முதல்வர் , மின் துறை அமைச்சர் மற்றும் மின் துறை ஊழியர்களும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் மின் துறையில் தனியார் பங்கு 51 % , அரசு பங்கு 49 %வாக முடிவெடுக்கப்பட்டது. இதை நடை முறை படுத்த அரசு தவறி விட்டது. மேலும் பிரீ பெய்டு மின் மீட்டர் பொறுத்த ஆகும் செலவில் 400 கோடி ரூபாய்க்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இது புதுவை மக்களின் வரிப்பணம் . அதனை மக்களின் வளர்ச்சிக்குதான் செலவிட வேண்டுமே தவிர , மக்களின் எதிர்ப்பை மீறி மக்களிடம் கருத்து கேட்காமல் அதிகாரத் தோரனையோடு மக்களை வஞ்சிக்க பயன் படுத்தலாமா? அதற்கு முதல்வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கவர்னர் இடம் பெய்ர்ந்து விடுவார் . அவருக்கு புதுவை மக்கள் நலன் மீது அக்கறை இருக்க வாய்ப்பில்லை .ஆனால் முதல்வர் ரங்கசாமி மீண்டும் புதுவை மக்களை சந்தித்து பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்கள் நலன் கருதி தான் பா.ஜ. கவுடன் கூட்டணி அமைத்துள்ளேன் மாநில அந்தஸ்து பெறுவதுதான் என் லட்சியம் என்று கூறிய முதல்வர் ரங்கசாமி அவர்கள் இன்று மின்துறை தனியார் மயமாக்கல் விஷயத்தில் மக்கள் நலனை மறந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக, மின் மீட்டர் பொறுத்த மக்கள் வரிப்பணத்தை செலவு செய்ய ஒப்புதல் கேட்டு துணை நிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பியது புதுவை மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? மக்கள் நல திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ரங்கசாமி அவர்கள் மக்களுக்கு எதிரான , ஏழை எளிய மக்களை நசுக்க கூடிய மின் மீட்டர் திட்டத்திற்கு மட்டும் அதிகாரிகளுக்கு கோப்பு அனுப்பி எப்படி அனுமதி பெற்றார் என் பாதை முதல்வர் விளக்க வேண்டும். மத்திய அரசின் கைப்பாவையாக கவர்னருடன் இணைந்து முதல்வர் செயல்படுவது புதுச்சேரியை ஒஸ்ட் புதுச்சேரியாக மாற்றிவிடும் என்பதை முதல்வர் உணர வேண்டும். மேலும் மின் துறை தனியார் மயமாதல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் , தீர்ப்பு வரும்வரை பிரிபெய்டு மின் மீட்டர் பொருத்தும் பணியை முதல்வர் நிறுத்திவைக்க வேண்டும் . அல்லது தனது முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக , வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்காத முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவை மக்களால் கிடைத்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுசேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.