சூலூர் காவல் துறையினர் அதிரடி ஐந்து லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கைப்பற்றினர் ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சூலூர் காவல் துறையினர் தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா பான் மசாலா பொருட்களை கைப்பற்றுவதும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர் இந்த நிலையில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிளான காவல்துறையினர் சம்பவத்தைன்று  பைபாஸ் ரோடு குளத்தூர் பிரிவு நீலாம்பூர் அருகில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் மஞ்சப்பை ஒன்றில் ஐந்து கிலோ கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த குற்றத்திற்காக அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் விசாரணையில் குற்றவாளி பெயர் கருப்புசாமி (45) மதுரையைச் சார்ந்த இவர் இருகூரில் தங்கி இருப்பது தெரிய வந்தது வீட்டில் சென்று பார்த்த பொழுது சுமார் 54 கிலோ கஞ்சாவை சூலூர் காவல் துறையினர் கைப்பற்றினர்  இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய்  இவருடன் இருந்த நாகராஜ் (47) என்பவர் தலைமறைவாகி விட்டார் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் கைது செய்யப்பட்ட கருப்புசாமியை சூலூர் காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்
Previous Post Next Post