சென்னை: விஜயாந்துக்கு கொரோனா.. வெண்டிலேட்டர் சிகிச்சை.
கடந்த வாரத்தில் உடல் நலம் சரியில்லாமல் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் உடல்நலம் சரியில்லாமல் செவ்வாய்கிழமை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால் மியாட் மருத்துவமனைக்கு 50 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.