தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவு தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் இரங்கல் அறிக்கை
இன்று காலை புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் இறந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது, ஏனென்றால் அவரது திரை உலக காலத்தில் அவரது நடித்த படங்கள் பெரும்பாலும் இளைஞர்களை நல்வழி படுத்தக்கூடிய தெய்வ பக்தியையும் தேசபக்தியையும் உருவாக்க தூண்டுகோளாக இருந்ததுஅந்த காலகட்டத்தில் இவர் தெய்வ பக்தி தேசபக்தியுடன் நடிக்கவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் நல்வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கும் நிலைமை வந்திருக்கும் அந்த நிலைமையை மீட்டெடுத்த விஜயகாந்த் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ஆவார் கேப்டன் தீவிர ஆண்டாள் பக்தர், அவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை போலவே அவர் வீட்டிற்கு வரும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சாப்பாடு சாப்பிட்டு விட்டு தான் செல்லச் சொல்வார். மேலும் குடும்ப பங்கத்திற்கு விரோதமாகவும் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாகும் என்றும் அவர் நடித்ததே இல்லை கலாச்சாரத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் கலாச்சார வழியில் நடந்தவர் அவரது அரசியல் வாழ்க்கையும் திராவிட அரசியலை புரட்டி போடும் நிலையில் தான் அவர் உருவாக்கினார். கேப்டன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக வேண்டுகிறோம் அவர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.