பண்ணாரி கோவில் அருகே, ஒற்றை காட்டு யானை அட்டகாசம் - தேநீர் கடை துவம்சம்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங் கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்கு கள் உள்ளன.இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,பண்ணாரி வனச் சோதனை சாவடி அருகே,பண்ணாரி வனப்பகுதி  யில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, பண்ணாரி கோவில் அருகேஉள்ள தேநீர் கடையில் உணவு தேடி, கடையை துவம்சம் செய்தது.

இதனால் இன்று வெள்ளிக்கிழமை பண்ணாரி அம்மன் கோவிலுக்குசாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் மற்றும் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், கோவில் அருகே சாலை யோர கடை வியாபாரிகள் அச்ச மடை ந்தனர்.சம்பவம்அறிந்துவனச்சோதனை சாவடியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சமீப காலமாக பண்ணாரி வன்ப் பகுதிக்குள் செல்லும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக, பயணிக்கும் படி, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post